ALL VIDEO ஆன்மீகம் NEWS
BiharElection2020: தொங்கியது...71 தொகுதிகள் குறித்த விவரம் இதோ
October 28, 2020 • Dharmalingam

இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல்  வாக்குபதிவு நடைபெறுகிறது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர்  114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் போட்டியிடுபர்வகளில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு  உள்ளது குறிப்பிடத்தக்கது.30,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இனி பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகள்  குறித்த விவரம் இதோ: ஆர்ஜேடி-41 தொகுதிகளிலும்,ஜேடியூ-41 தொகுதிகளிலும்,பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், எல்ஜேபி-41 தொகுதிகளிலும் களம் காணுகின்றன.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.2ம் கட்ட வாக்குப்பதிவு நவ.,3ந்தேதி நடைபெறுகிறது.3ம்கட்ட வாக்குப்பதிவு நவ.,7ந்தேதி நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை நவ.,10ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.