ALL ஆன்மீகம் VIDEO NEWS
59 சீன ஆப்களுக்கு தடை
July 1, 2020 • Dharmalingam

 

 

லடாக் மோதலை தொடர்ந்து, சீனாவுக்கு வர்த்தக ரீதியாகவும் நெருக்கடி தர வேண்டுமென்று, உலகப் புகழ்பெற்ற அதன் டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59  மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது. 

இந்த ஆப்கள் அந்நிய நாட்டிற்கு இந்திய பயனர்களின் தகவல்களை விற்பதாகவும், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு 59  சீன ஆப்களுக்கு தடை விதித்த நிலையில், இந்திய அரசுடன் தொடர்ந்து இணக்கமாக செயல்படுவதாகவும், இந்திய பயனர்களின் தகவல்களை சீனா உள்ளிட்ட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் பகிரவில்லை என்றும் டிக் டாக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிக் டாக் தாமாக முன்வந்து வெளியேறியது மத்திய அரசு தடை விதித்த சில மணி நேரத்திலேயே, அதுபற்றி டிக்டாக் நிறுவனம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் டிக்டாக் விரைவில் அரசிடம் விளக்கம் தரும். மேலும், தடை விதிக்கப்பட்டதால், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டிக் டாக் தாமாக முன்வந்து வெளியேறியது. இதை தொடர்ந்து டிக் டாக் செயலி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 

* தடை செய்யப்பட்ட சீன ஆப்கள்
1, டிக்டாக், 2. ஷேர்இட், 3. குவாய், 4. யூசி பிரவுசர், 5. பைது மேப், 6. ஷேன், 7. கிளாஷ் ஆப் கிங்ஸ், 8. டியூ பேட்டரி சேவர், 9. ஹெலோ, 10. லைக்கி, 11. யூகேம் மேக்கப், 12. மீ கம்யூனிட்டி, 13. சிஎம் பிரவுசர்ஸ், 14. வைரஸ் கிளீனர், 15. ஏபியூஎஸ் பிரவுசர், 16. ரோமீ, 17. கிளப் பேக்டரி, 18. நியூஸ்டாக், 19. பியூட்ரி பிளஸ், 20. வீசாட், 21. யூசி நியூஸ், 22. க்யூக்யூ மெயில், 23. வெய்போ, 24. ஷெண்டர், 25. க்யூக்யூ மியூசிக்ஸ், 26. க்யூக்யூ நியூஸ்பீட், 27. பிகோ லைவ், 28. செல்பீ சிட்டி, 29. மெயில் மாஸ்டர், 30. பேரலல் ஸ்பேஷ், 31. மீ வீடியோ கால் - ஷியோமீ, 32. வீசிங், 33. இஎஸ் பைல் எக்ஸ்புளோரர், 34. விவா வீடியோ - க்யூயூ வீடியோ இன்க், 35. மெய்து, 36. விகோ வீடியோ, 37. நியூ வீடியோ ஸ்டேடஸ், 38. டியூ ரிக்கார்டர், 39. வால்ட் - ஹைட், 40. கேச்சே கிளீனர் டியூ ஆப் ஸ்டூடியோ, 41. டியூ கிளீனர், 42. டியூ பிரவுசர், 43. ஹகோ பிளே வித் நியூ பிரண்ட்ஸ், 44. கேம் ஸ்கேனர், 45. கிளீன் மாஸ்டர் - சீட்டா மொபைல், 46. வொண்டர் கேமரா, 47. போட்டோ வொண்டர், 48. க்யூக்யூ பிளேயர், 49. வீ மீட், 50. ஸ்வீட் செல்பீ, 51. பைது டிரான்ஸ்லேட், 52. வீமேட், 53. க்யூக்யூ இன்டர்நேஷனல், 54. க்யூக்யூ செக்யூரிட் சென்டர், 55. க்யூக்யூ லாஞ்சர், 56. யூ வீடியோ, 57. வீ ப்ளை ஸ்டேடஸ் வீடியோ, 58. மொபைல் லெஜன்ட்ஸ், 59. டியூ பிரைவசி.