ALL VIDEO ஆன்மீகம் NEWS
4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது.
August 5, 2020 • Dharmalingam

 

மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது. மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த 29.07.2020ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 02.08.2020-ம் தேதி சுவாச கோளாறு மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,031 பேர் இன்று (ஆக.,05) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் 300க்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கந்தசாமிக்கும், அவரது மகனுக்கும் தொற்று உறுதியானதை அடுத்து இருவரும் ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.