ALL VIDEO ஆன்மீகம் NEWS
4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் - மத்திய அரசு
August 29, 2020 • Dharmalingam

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்தமார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் திறந்த வெளி திரையரங்கம் செப்டம்பர் 21ம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.