ALL ஆன்மீகம் NEWS VIDEO
21-05-2020 ராசி பலன்கள்
May 20, 2020 • Dharmalingam • ஆன்மீகம்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அவ்வப்போது பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்த தொல்லைகள் எதுவும் இல்லாததால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். வழக்கமான மருத்துவச் செலவை விட சற்று கூடுதல் செலவு இருப்பதால் சிறிய அளவில் சிரமம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : இன்பமான நாள்.

பரணி : அன்பு அதிகரிக்கும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்
வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த காரியங்கள்  முடிவதில் தாமதம் நேரிடலாம் . சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வியாபாரிகள் பழைய கடனைப் பற்றி சிந்தித்து அதற்கு நல்லதொரு தீர்வையும் காண்பர்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : தாமதம் நேரிடலாம்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

மிதுனம் :
வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். சகபணியாளர்களால் நிம்மதி கிட்டும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து பாராட்டுப் பெறுவர். மாணவர்கள் சமயோசித புத்தியால் பல சாதனையை நிகழ்த்துவர். மனதில் புதுவிதமான உற்சாகம் அதிகரிக்கும். எதிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : உற்சாகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : கலகலப்பான நாள்.
புனர்பூசம் : கவலைகள் விலகும்.

கடகம்:
வியாபாரத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. கணவரின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். செல்வ சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும்.. தந்தைவழி உறவுகளின் மூலம் சாதகமான சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்மம்  
வியாபாரத்தில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதால் வீடு களைகட்டும். வருமானம் திருப்திகரமாகும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட  காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.  குடும்பத்தினர் உங்களின்  ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்

கன்னி
இனிமையாக பேசி சகபணியாளர்களின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.. நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களிடம் நிதானமான பேசுவது நன்மையை தரும்.  வியாபாரத்தில் பணியாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : செலவுகள் ஏற்படலாம்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பொறுமையை கடைபிடிக்கவும்.

துலாம்
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பெண்களுக்கு மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் முயற்சிகள் வெற்றியில் முடியும். மகளிடம் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். கனிவான பேச்சுக்கள் சாதகமான பலனை அளிக்கும். புதிய முயற்சிகளின்  மூலம் பாராட்டப்படுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : பேச்சுக்களால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.
விசாகம் : செயலில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்
வியாபாரத்தில் பல கடுமையான முயற்சிகளை செய்து லாபத்தை பெறுவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். நல்லவர்களின் ஆசி கிடைக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மலரும். அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு
 சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு மனஇறுக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படலாம். வெளிநாட்டு பயணங்களில் சிறு தடைகள் ஏற்பட்டு பின் விலகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். முக்கிய முடிவுகளில்  குடும்ப பெரியோர்களின் ஆலோசனை அவசியம். செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : தைரியம் அதிகரிக்கும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.

மகரம்
பணியாளர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படலாம். வியாபாரிகள் தேங்கியிருந்த சரக்குககளை நல்ல லாபத்திற்கு விற்பர். விவாதங்களை தவிர்ப்பதால் மன உளைச்சலை தடுக்கலாம். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். திடீர் பயணங்களால்  ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் சாதகமான பலன்கள் அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் செயல்பாடுகளில்  தலையிடவேண்டாம் ..
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : விற்பனை அதிகரிக்கும்

கும்பம்
 உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் மனதில் உள்ளதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதால் மனஅழுத்தம் குறையும். தந்தைவழியில் எதிர்பார்த்த சுபச்செயல்கள்  கைகூடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் முயற்சிக்கேற்ப இலாபம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சுபச்செயல்கள்  கைகூடும்.
சதயம் : உற்சாகமான நாள்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்

மீனம்
தாயிடம் சண்டை போட வேண்டாம். அலுவலகத்தில் நல்லவர் யார் என்பதை இனம் காண்பீர்கள். புதிய வீடு கட்டும் பாக்கியம் உண்டு. எதிர்பாராத வரவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். அக்கம் பக்கம் வீட்டார்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இலாபகரமான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : இடையூறுகள் மறையும்.
உத்திரட்டாதி : வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : இலாபகரமான நாள்.

S.மோகனா