ALL ஆன்மீகம் NEWS VIDEO
15/06/2020- இன்றைய ராசிபலன்
June 15, 2020 • Dharmalingam

மேஷம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும்.பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அந்தஸ்து உயரும் நாள்.

மிதுனம்

சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்கள் மனம்விட்டு  பேசுவார்கள். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்

உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி  கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில்  இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிலும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும், நன்மையும் உண்டாகும்.உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுத்தியைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முன்னேற்றம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும்.உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும் .  நிதானமுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றியே.புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவுகணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சந்தோஷம் நிலைக்கும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். இதுவரை இருந்த பிரச்னைகள், தடைகள் நீங்கும்மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும் பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மோகனா செல்வராஜ்