ALL ஆன்மீகம் NEWS VIDEO
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
August 24, 2020 • Dharmalingam

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கடனை பைசல் செய்வதற்கு வழி கிடைக்கும்.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: ஒருவித படபடப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை தலைதூக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்துக்குள் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பீர்கள்.

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும்.

மகரம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கும்பம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

மோகனா  செல்வராஜ்