ALL ஆன்மீகம் NEWS VIDEO
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 09/09/2020
September 9, 2020 • Dharmalingam

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் பொறுமை தேவைப்படும் நாள்.செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் அநாவசியமாக விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி தலைதூக்கும்.ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் அடுத்தடுத்து வரும்.உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். 

துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள்.யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்:  உங்களின் அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வாகனத்தை சரி செய்வீர்கள்.நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமண பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். திடீர் பயணம் ஏற்படலாம்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதி பெருகும்.