ALL VIDEO NEWS ஆன்மீகம்
10/06/2020
June 10, 2020 • Dharmalingam

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஒரு பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.  நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்திடுங்கள். வழக்கு ஏதேனும் இருப்பின் அது உங்களுக்குச் சாதகமாக இருக்கும்உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும்.  உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலை உண்டு  என்றிருக்க வேண்டியநாள்.

கடகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கடின உழைப்பு உழைக்க வேண்டி இருக்கும். அந்த உழைப்புக்கு ஏற்ற பலனும் இருக்கும். நல்லோர் ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில்  உங்களின் திறமைகள் வெளிப்படும்.  நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: இன்று அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனம் தேவை.காலை, மாலை இரு வேளைகளிலும் கோவிலுக்குச் சென்று வாருங்கள். மனதில் ஏதோ ஒருவகையில் சஞ்சலமும், குழப்பமும் ஏற்படக்கூடும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

துலாம்: இன்று சிறு விஷயத்திற்கு கூட பெரிதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். தாங்களே எதிர்பாராத வகையில் ஒரிடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்பவர்கள் தக்க லாபத்தை அடையலாம்திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். இன்று மனதில் சஞ்சலங்கள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சினை இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினை குறையும்.உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார். மதிப்பு உயரும் நாள்.

தனுசு: வேலையில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண வரவு, இதர சலுகைகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள்.  தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் எல்லாம் தவறாக முடியும். இன்று ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். அதனால் மனம் நிம்மதி பெறும். உற்றார் - உறவினர் உங்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியரிடம் உயரதிகாரியின் பற்றி விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: இன்று நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணலாம். என்றாலும் சில அத்தியாவசியமான செலவுகளை உங்களால் தவிர்க்க முடியாது.அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். சகோதரர்களிடையே பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிர்ச்சி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: இன்று உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள்.  உங்கள் குடும்பத்தாரின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை எழக்  கூடும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

மோகனா செல்வராஜ்