ALL VIDEO NEWS ஆன்மீகம்
வ.வே.சுப்பிரமணிய ஐயர்
June 4, 2020 • Dharmalingam

வ.வே.சுப்பிரமணிய ஐயர் (02/04/1881- 04/06/1925)

இன்று இவருடைய நினைவு தினம்..!


🏁 சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டம் வரகனேரியில் பிறந்தார்.

🏁 இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது, சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம் அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.

🏁 இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

🏁 இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.

🏁 இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி , மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

🏁 தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.

தொகுப்பு   -  மோகனா செல்வராஜ்