ALL ஆன்மீகம் VIDEO NEWS
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை
August 2, 2020 • Dharmalingam

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

கிளம்புவதற்கு முன்


1. கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர், சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைனில் (www.newdelhiairport.in)அனைத்து பயனாளர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

2. 14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்துதல் செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அதில் 7 நாட்கள் சொந்த செலவில் முகாமிலும், 7 நாடுகளில் வீட்டிலும் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.

3. கர்ப்பிணி, குடும்ப உறுப்பினர் மரணம் உடல்நலக்குறைவு, 10 வயது வரை உள்ள குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தப்படுவார்கள்.

4. இந்த சலுகையை பெறுவதற்கு, கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முடிவை அரசு பரிசீலனை செய்து அறிவிக்கும்.

5. சொந்த ஊர் திரும்பியதும், ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவை காண்பித்து முகாமில் தனிமைபடுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாம். அந்த பரிசோதனையை, கிளம்புவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் எடுத்து, ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேலும், அந்த சான்றிதழின் உறுதித்தன்மைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் பொய் என கண்டுபிடிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில், சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.