ALL ஆன்மீகம் NEWS VIDEO
வெந்தயம் ஒரு கண்ணோட்டம்
June 18, 2020 • Dharmalingam

 

வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை.

இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்

வெந்தயக் கீரை என்பது கீரைகளில் ஒன்றாகும். கீரைகளில் பல வகைகள் உண்டு என்றாலும், அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, விட்டமின்கள் என்று உள்ளன.

வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின்கள் போன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

மருத்துவப் பயன்கள்

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும்.

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
 
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

[13:14, 6/18/2020] Mohana Selvaraj: று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
 
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
 
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
[13:15, 6/18/2020] Mohana Selvaraj: தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
 
வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும்.

இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
 
வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

நமது வீ‌ட்டி‌ல் உ‌ள்ள ஐந்தறை பெட்டியில் உள்ள வெந்தயம் மிகவும் பயன் உள்ள உணவு பொருள், 

அனைவரும் சமையலில் பயன் படுத்தி  உடல் நலம் பேணுவோம்.

அன்புடன் மோகனா செல்வராஜ்