ALL VIDEO NEWS ஆன்மீகம்
வெண்டை காய் -ஒரு கண்ணோட்டம்
June 17, 2020 • Dharmalingam

வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும்.

வெண்டி (வெண்டை) மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே (மால்வேசியே) குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும் (தாவரமாகும்).

இதன் அறிவியற் பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus esculentus) என்பதாகும். அமெரிக்காவில் இதனை ஓக்ரா என்று அழைக்கின்றனர்.

இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம்.

இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும்.

10 - 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை.

5 - 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 - 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.

அடிக்கடி உணவில் வெண்டைக்காயை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்...!!

வெண்டைக்காயின் வழவழப்பாக இருக்க காரணம் அதில் இருக்கும் பெக்டின் என்ற பொருள்தான்.

வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது.

மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 

மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார்சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.

வெண்டைக்காயில் இருக்கும் கம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.
 
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.
 
வெண்டைக்காயில் இருக்கும் கொழ கொழ சத்து குடலுக்கு இதத்தை அளிப்பதுடன், வேண்டாத கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது.மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான காய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. 


பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டையின் ஊட்டச்சத்துக்களின் விவரம் :

கலோரிகள் = 25
ஊட்ட நார்சத்து = 2 கிராம்
புரதம் = 1.5 கிராம்
கார்போஹைட்ரேட் = 5.8 கிராம்
வைட்டமின் A = 460 IU
வைட்டமின் C = 13 மி.கி
ஃபோலிக் அமிலம் = 36.5 மை.கி
சுண்ணாம்புச்சத்து = 50 மி.கி
இரும்பு = 0.4 மி.கி
பொட்டாசியம் = 256 மி.கி
மெக்னீசியம் = 46 மி.கி


இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ஊறவைத்து அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும். அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

அனைவரும் வெண்டைக்காய் சமையலில் பயன் படுத்தி  உடல் நலம்

பேணுவோம்

அன்புடன் மோகனா செல்வராஜ்