ALL ஆன்மீகம் NEWS VIDEO
வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்
August 6, 2020 • Dharmalingam

சுவையான வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

எளிய வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்  செய்யும் முறை

வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல் சமையல் குறிப்புகள், வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல் செய்வது எப்படி.

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.

சமைக்க தேவையானவை

உப்பு – தேவைக்கு,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – காரத்திற்கு ஏற்ப,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 7 பல்,
பழுத்த பெங்களூர் தக்காளி – 2,
பிஞ்சு வெண்டைக்காய் – 500 கிராம் (நறுக்கவும்),
நறுக்கிய மல்லித்தழை – சிறிது,

செய்முறை :

முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளில் வெண்டைக்காய் கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாகபூண்டு போட்டு வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின் வெண்டைக்காயை  அப்படியே போட்டு  உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளுங்கள்.

வெண்டைக்காய் நன்கு   வதங்கியதும்  மிளகாய்த்தூளை சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளியுடன் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள் சேர்ந்து நன்கு கலந்து வந்ததும்  இறுதியாக கொத்தமல்லி சேர்த்து பிரட்டிவிட்டு தட்டு போட்டு மூடி விடுங்கள்.

சிறு தீயில் 5-6  நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

சூப்பரான சுவையில் வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்  ரெடி

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா