ALL ஆன்மீகம் NEWS VIDEO
வீட்டு ஜன்னல், கதவுக்கு 73 லட்சம் செலவு: ஜெகன் மீது சந்திரபாபு புகார்
November 8, 2019 • Dharmalingam

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  ஆந்திராவின் தாடேபல்லியில் உள்ள முதல்வர் ஜெகன் மோகனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கதவுகள் அமைக்க ₹73 லட்சத்தை, சாலை மற்றும் கட்டிட துறையின் நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து கடந்த மாதம் 15ம் தேதி அரசு வெளியிட்ட உத்தரவு நகலையும் தனது டிவீட்டில் சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார். மாநிலத்தில் நிதி நெருக்கடி உள்ள நிலையில் முதல்வராக பதவி ஏற்று 5 மாதத்தில் 73 லட்சம் செலவில் முதல்வர் வீட்டிற்கான ஜன்னல் மற்றும் கதவிற்காக செலவு செய்தது குறித்து சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.