ALL ஆன்மீகம் NEWS VIDEO
விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை
June 6, 2020 • Dharmalingam

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை: முதலமைச்சர் நாராயணசாமி 

புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே வரும் திங்கட் கிழமை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளதால்  மத்திய அரசின் வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடை பிடிக்க வேண்டும் என்றும், பிரசாதம் மற்றும் குடிநீர் வழங்க அனுமதி இல்லை என்றும், தெரிவித்த அவர், தனிமனித இடைவெளியை  பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 மேலும் 10 வயத்திற்குப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டு கொண்டார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து அனைத்து கட்சியினரையும் அழைத்து , பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், அனுமதி கிடைத்தவுடன் சட்டமன்றத்தை கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.