ALL VIDEO ஆன்மீகம் NEWS
வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு..!
May 30, 2020 • Dharmalingam

வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு..!

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஒற்றை மணற்கல் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளது.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சாம் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டட பணியின்போது  சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்தை கொண்ட கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது.

அந்த கோயில் கெமர் பேரரசின் இரண்டாம் மன்னர் இந்திரவர்மன் ஆட்சியின் போது கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு, இக்கோயில் வளாகத்தில் ஆறு சிவலிங்கங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த சிவலிங்கமானது மிகவும் அற்புதமானது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும். இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா - வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்