ALL ஆன்மீகம் NEWS VIDEO
விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் எப்படி நடத்துவது தலைமைச் செயலாளர் ஆலோசனை
August 5, 2020 • Dharmalingam

தமிழகத்தில் சிறப்பாக கொண்டப்படும் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22-ம் தேதி  கொண்டாடப்பட உள்ளது. கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி அளிக்குமாறு தொடர்ந்து தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில்  ஈடுபட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து 17 இந்து மத தலைவர்களுடன் இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான  வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.