ALL ஆன்மீகம் VIDEO NEWS
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி
July 26, 2020 • Dharmalingam

சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர்கள் பலர்.

உலகம் போற்றும் சாதனையாளர்கள் கடந்து வந்த பாதை

ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என சாதித்து காட்டியவர்கள் ஏராளம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, வானில் பறக்கும் அளவு தனது திறமைகளை வளர்த்து, நட்சத்திரங்களில் ஒன்றாக கலந்துவிட்ட கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்..

மாபெரும் தொழிலதிபர்  மருத்துவர் பொறியியல் வல்லுநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

👩‍🚀 அவர்களுள் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை இவர்.

👩‍🚀 விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்...

👩‍🚀 அமெரிக்காவில் காலடி வைப்பதே கனவாய் இருந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா சென்று விண்வெளியில் காலடி வைத்த பெண்.

👩‍🚀 இன்றும் பல பெண்களுக்கு முன் மாதிரியாக திகழும் ஓர் பெண்...

👩‍🚀 ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டியவர்...

👩‍🚀 இந்தியாவின் 'விண்வெளி மங்கை" 'விண்வெளி தேவதை" என்று அழைக்கப்படுபவர்...

அவர்தான் விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய

👩‍🚀கல்பனா சாவ்லா🚀

👩‍🚀கல்பனா சாவ்லா (Kalpana Chawla, 17 மார்ச் 1962 - 1 பெப்ரவரி 2003) ஒரு இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்

கல்பனா சாவ்லாவிற்கு சிறுவயது முதல் விண்வெளி என்றால் ஆசை. பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பது, நட்சத்திரங்களை எண்ணுவது, விமான ஓவியங்கள் தீட்டி அழகு பார்ப்பது இதுவே கல்பனாவிற்கு பிடித்த பொழுதுபோக்காக இருந்தது.

இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து ஓடிவந்து விமானம் மறையும் வரை கண்களை சுருக்கி பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர் தான் கல்பனா சாவ்லாவும்.

👩‍🚀 கல்பனா சாவ்லாவிற்கு சிறுவயதிலேயே பைலட்டாக ஆசை. ஆனால், அதை தனது வீட்டில் சொன்னபோது அவரின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. டாக்டர், இன்ஜினீயர் அல்லது ஐ.ஏ.எஸ். இந்த மூன்றும்தான் கல்பனாவுக்கு பெற்றோர் கொடுத்த சாய்ஸ். அதில் ஒன்றை தேர்வு செய்திருந்தால் இன்று நம் யாருக்குமே கல்பனா சாவ்லாவை தெரியாமலே போயிருக்கலாம். ஆனால், விடாமல் தன் கனவுகளை துரத்தினார். ஒருநாள் அவற்றை சாத்தியமாக்கினார்.

கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.

அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார்.

அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றிCFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.

கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார்.

1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார்.

கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன.

இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது

1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.

👩‍🚀 விண்வெளி கனவை என்னால் மெய்யாக்கி காட்ட முடியும் என்ற உறுதியுடனும், லட்சியமுடனும் சாதித்து காட்டியவர். இவர் உலகைவிட்டு மறைந்தாலும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லாவின் சாதனைகளை இன்றளவும் அனைவராலும் போற்றப்படுகிறது.

👩‍🚀  மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:

  • அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
  • நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
  • இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், வீரதீர சாதனைகள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது.

மோகனா  செல்வராஜ்