ALL NEWS ஆன்மீகம் VIDEO
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாள்
June 7, 2020 • Dharmalingam • ஆன்மீகம்

மைத்ர முகூர்த்தம்... வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாள்... உகந்த நேரம்...!!    கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்...!!


💰 வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதையும் திருப்பி கொடுக்கும் வகையில் வசதி வாய்ப்புகள் உருவாகும்.

💰 மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு.  வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள்,

💰 அஸ்வினி நட்சத்திரமும்-மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும்-விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு 'மைத்ர முகூர்த்தம்" என்று பெயர். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும், சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

💰 செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம். 

💰 சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

💰 16.06.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணி முதல் 04.00 மணி வரை

💰 02.07.2020 வியாழக்கிழமை மதியம் 03.05 மணி முதல் மாலை 05.05 மணி வரை

💰 13.07.2020 திங்கட்கிழமை நள்ளிரவு 12.12 மணி முதல் அதிகாலை 02.12 மணி வரை

💰 18.07.2020 சனிக்கிழமை காலை 06.08 மணி முதல் 08.08 மணி வரை, மதியம் 12.08 மணி முதல் 02.08 மணி வரை, மாலை 06.08 மணி முதல் இரவு 08.08 மணி வரை

💰 29.07.2020 புதன்கிழமை மதியம் 01.52 மணி முதல் 03.52 மணி வரை

💰 09.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.32 மணி முதல் 12.32 மணி வரை

💰 26.08.2020 புதன்கிழமை மதியம் 12.36 மணி முதல் 02.36 மணி வரை

💰 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.48 மணி முதல் 10.48 மணி வரை

💰 22.09.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

💰 03.10.2020 சனிக்கிழமை இரவு 07.00 மணி முதல் 08.32 மணி வரை

💰 20.10.2020 செவ்வாய்க்கிழமை காலை 08.12 மணி முதல் 09.38 மணி வரை

💰 30.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 04.45 மணி முதல் 06.45 மணி வரை

💰 31.10.2020 சனிக்கிழமை மாலை 04.49 மணி முதல் 06.49 மணி வரை

💰 16.11.2020 திங்கட்கிழமை காலை 06.08 மணி முதல் 08.08 மணி வரை

💰 27.11.2020 வெள்ளிக்கிழமை மாலை 04.01 மணி முதல் 06.01 மணி வரை

💰 12.12.2020 சனிக்கிழமை காலை 10.46 மணி முதல் மதியம் 12.46 மணி வரை, மாலை 4.46 மணி முதல் 06.46 மணி வரை, இரவு 10.46 மணி முதல் 12.46 மணி வரை

💰 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 04.23 மணி முதல் 06.23 மணி வரை

💰 24.12.2020 வியாழக்கிழமை மதியம் 03.16 மணி முதல் மாலை 05.16 மணி வரை

💰 இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று.

இக்காலத்தை குறித்து வைத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

ராமாயணத்தில் ஒரு வரி உண்டு அது என்னவென்றால்"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன் " என்ற வாக்கினை மனத்தில் கொண்டு நம்முடைய கடனை நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.

நாம் கலக்க மில்லாமல் வாழ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுப்பு  மோகனா செல்வராஜ்