ALL VIDEO ஆன்மீகம் NEWS
லியாண்டர் பயஸ் பிறந்த தினம்
June 17, 2020 • Dharmalingam

 

லியாண்டர் பயஸ் (வங்காள பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர்.

இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர்.

இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி  அணியில் விளையாடியவர்.

ஆண்கள் இரட்டையர்

2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.

இவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன்இ சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன் போட்டி என அனைத்திலும் பட்டங்களை வென்றவர். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனாஇ பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.