ALL ஆன்மீகம் NEWS VIDEO
ராணிப்பேட்டையில் மரணித்த மனிதநேயம் 
August 4, 2020 • Dharmalingam

ராணிப்பேட்டையில் மரணித்த மனிதநேயம் 

ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் எற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் சொந்த ஊரான நாவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், உடலை புதைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் படி அவரின் சடலத்தை கொண்டு வந்தனர்

ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென்று தகராறில் ஈடுபட்டனர

கொரோனாவால் இறந்த செவிலியர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.