ALL ஆன்மீகம் NEWS VIDEO
ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை
July 30, 2020 • Dharmalingam

 

''காங்கிரஸ் கட்சிக்கு, முழு நேர தலைவரை தேர்வு செய்வது, அவசியமானது என காங். மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் குரல் எழுப்பியுள்ள நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா ஜூலை 30-ல் ராஜ்யசாப எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதையடுத்து இன்று ஜூலை 30-ம் தேதி சோனியா தலைமையில் காங்.ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது.

இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது, ராகுலை மீண்டும் தலைவராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.