ALL ஆன்மீகம் NEWS VIDEO
ராசி பலன்கள் (24-05-2020)
May 24, 2020 • Dharmalingam

மேஷம்

உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் மனதில் ஒருவிதமான மாற்றத்தை அளிக்கும். உயர் அதிகாரிகளால்  பாராட்டப்படுவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : மாற்றமான நாள்.

கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும். 

ரிஷபம்

பழைய நினைவுகளால் மனதில் இருந்த கவலைகள் மறையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தனவருவாயின்  மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : கவலைகள் மறையும்.

ரோகிணி : பயணங்கள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அதிகாரம் மேம்படும்.

மிதுனம்

வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு விருப்பமானவரிடம் அனுசரித்து செல்லவும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிர்பார்த்த உதவிகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.

கடகம்

குலதெய்வ வழிபாடு மனதிலுள்ள குழப்பங்களை நீக்கி தெளிவை அளிக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களுடன்  தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : தெளிவு கிடைக்கும்.

பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.

ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும். 

சிம்மம்

 வாதம் புரிவதில் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களின்  மூலம் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த பணி உயர்வு சாதகமாக அமையும். சபைகளில்  ஆதரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் : ஆதரவான நாள்.

உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.

கன்னி

பணியில் எதிர்பார்த்த சாதகமான மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். அரசாங்கம் சம்பந்தமான எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

துலாம்

 பிள்ளைகளின்  மூலம் பெருமை படக்கூடிய செயல்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மகான்களின் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். தொழிலில் புதுவிதமான எண்ணங்களும், உத்திகளும் தோன்றும். விவாதங்களில் சாதகமான முடிவுகள்  கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : அமைதி ஏற்படும்.

விசாகம் : சாதகமான நாள்.

விருச்சகம்

முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனத்துடன் இருக்கவும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சலும், பதற்றமும் தோன்றி மறையும்.  

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

தனுசு

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : வெற்றிகரமான நாள்.

பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்

வாக்குறுதிகளை கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும். வாதத்திறமையால் பொருள் இலாபம் அடைவீர்கள். நினைவாற்றல் மேம்படும். மனதில் புதுவிதமான லட்சியங்கள் உண்டாகும்.  பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

திருவோணம் : இலாபகரமான நாள்.

அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.  

கும்பம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் புதிய எண்ணங்கள் உண்டாகும். ஆன்மிகம் சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : கவலைகள் மறையும்.

மீனம்

கௌரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் ஆதாயமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : ஆதாயமான உண்டாகும்.

மோகனா செல்வராஜ்