ALL VIDEO NEWS ஆன்மீகம்
ராசி பலன்கள்  (25-05-2020)  
May 25, 2020 • Dharmalingam

ராசி பலன்கள்  (25-05-2020)

 மேஷம்

எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். தடைபட்ட செயல்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செய்திகளால் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : தைரியம் அதிகரிக்கும்.

பரணி : எதிர்ப்புகள் குறையும்.

கிருத்திகை : மாற்றமான நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் மேன்மை பெறும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். 

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

மிதுனம்

மனதில் இருந்த கவலைகள் நீங்குவதற்கான சூழல் அமையும். சுபவிரயம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். செயல்பாடுகளால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  தொழில் மற்றும் உணவு சம்பந்தமான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.

திருவாதிரை : தாமதங்கள் அகலும்.

புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

கடகம்

எதிர்பாராத செலவுகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகலாம். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். மற்றவர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகலாம்.

பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.

ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம்

குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபார முறையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் மேன்மையான சூழல் அமையும். இறைவழிபாடு தொடர்பான பயணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : குழப்பங்கள் அகலும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

கன்னி

 வியாபாரம் தொடர்பான எண்ணங்களும், அதற்கான முயற்சிகளும் மேம்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் உள்ள காலதாமதம் அகலும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.

அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சித்திரை : காலதாமதம் அகலும்.

துலாம்

எடுத்த வேலைகளை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : துரிதம் உண்டாகும்.

சுவாதி : திறமைகள் வெளிப்படும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம்

திட்டமிட்ட பணிகளை செயல்படுத்துவதில் சிறிது காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : காலதாமதம் உண்டாகும்.

அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

கேட்டை : ஆலோசித்து செயல்படவும்.

தனுசு

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதியவரின் ஆதரவுகளால் மாற்றமான சூழல் ஏற்படும். துரிதமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : துரிதம் உண்டாகும்.

உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.

மகரம்

உடன் பணிபுரிபவர்களிடம் வீண்வாதத்தை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். பகைமை இன்றி நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

கும்பம்

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியின் மேன்மைக்கான தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். இறைவழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுபமான நாள். 

சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.

மீனம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

ரேவதி : ஆர்வம் உண்டாகும்.

 மோகனா செல்வராஜ்