ALL ஆன்மீகம் NEWS VIDEO
ராசிபலன் 04/06/2020
June 4, 2020 • Dharmalingam

மேஷம்:

ராசி நாதன் செவ்வாய், பஞ்சமாதிபதி சூரியன் இருவரும் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும்.  சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் கண், சிறுநீரக தொற்று சம்மந்தமாக உபாதைகள் வந்து போகும். பாதியில் நின்ற கட்டிட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். சொந்த பந்தங்களின் குடும்ப விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 4.6.2020 பகல் 12.55. முதல் 6.6.2020 மாலை 4.41 வரை.

ரிஷபம்:

சனி, குரு, கேது மூவரின் அமைப்பு காரணமாக அலைச்சல், அதிருப்திகள் இருக்கும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.கணவன், மனைவி இடையே சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும்.உத்தியோகத்தில் நிறைகுறைகள் இருக்கும். வேலைச்சுமை, பயணங்கள், அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்:

ராசியில் கூட்டுக் கிரக சேர்க்கை இருப்பதால் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.  பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் திடீர் இடமாற்றம் காரணமாக சொந்த ஊர் திரும்புவார்கள். மகள் திருமண விஷயமாக உறவினரிடம் இருந்து மகிழ்ச்சியான தகவல் வரும்.

கடகம்:

யோகாதிபதி செவ்வாயின் பார்வை காரணமாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் . அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். சனி, கேது இருவரின் அமைப்பால் சாதகமான மாற்றம் வரும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்

சிம்மம்:

செவ்வாய், சூரியன் இருவரும் சாதகமாக இருப்பதால் உங்கள் திட்டங்கள் எல்லாம் முழுமையாக வெற்றியடையும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சனி, கேது இருவரின் அமைப்பு காரணமாக சிந்தனைகள் அதிகரிக்கும்.

கன்னி

புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். ரசிகா்களை மதித்துக் கெளரவப்படுத்தவும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவாா்கள். கணவரின் உடல்நலனில் கவனம் செலுத்துவாா்கள். தேவைக்கேற்ற பண வரவையும் பெறுவாா்கள். மாணவ மணிகள் நன்றாகப் படித்து எதிா்பாா்த்த மதிப்பெண்களை அள்ளுவாா்கள்.

துலாம்

புதிய ஒப்பந்தங்களைத் தேடாமல் இருப்பனவற்றைத் திறமையாக முடிக்க முயற்சிக்கவும். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளிப் போடாமல் குறித்த நேரத்திற்குள் செய்யவும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். அதேநேரம் கணவரின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும்.

விருச்சிகம்

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். தொண்டா்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் பிரச்னைகள் தோன்றினாலும் உங்களின் முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும். பெண்மணிகளைப் பொருத்தவரை கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை குறைத்துக் கொள்வாா்கள்.

தனுசு

நண்பா்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். ஆனாலும் சக கலைஞா்கள் மற்றும் ரசிகா்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.

மகரம்

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பாா்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவாா்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவமணிகள் கல்வியில் ஆா்வம் செலுத்தி மதிப்பெண்களை அள்ளுவாா்கள். பெற்றோா்களின் ஆதரவுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வாா்கள்.

கும்பம்

ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீா்கள். ரசிகா்களை உற்சாகப்படுத்தி அவா்களின் ஆதரவை அடைவீா்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீா்கள். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் வெற்றி காண்பீா்கள். பெற்றோா்களின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீா்கள்.

மீனம்

பெண்மணிகள் உற்றாா் உறவினா்களைச் சந்தித்து உற்சாகம் அடைவாா்கள். அதேநேரம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி பணவரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். அதோடு விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.உத்யோகஸ்தா்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும்..

மோகனா செல்வராஜ்