ALL ஆன்மீகம் NEWS VIDEO
ரவி சாஸ்திரி கிரிக்கெட் வீரர்
May 27, 2020 • Dharmalingam

 

ரவி சாஸ்திரி

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.

🏏 இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். பிறகு ஆல்ரவுண்டராக மாறினார்.

🏏 இவர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக பங்கேற்று முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானார்.

🏏 கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கிறார்.