ALL VIDEO ஆன்மீகம் NEWS
ரக் ஷா பந்தன் பண்டிகை களையிழப்பு
August 3, 2020 • Dharmalingam

இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ரக்  ஷா பந்தன் பண்டிகைக்கு இனிப்பு ஆர்டர் போதுமான அளவு இல்லை  என இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று ரக்ஷா பந்தன். சகோதர சகோதரிக்கிடையே பந்தத்தை பலப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகைதான் இது. உடன் பிறந்த சகோதரனுக்கு மட்டுமின்றி, சகோதரனாக பாவிக்கும் ஆண்களுக்கும் பெண்கள் ராக்கி கட்டி விடுகின்றனர்.

இனிப்புகளை வழங்குகின்றனர். ஆண்டுதோறும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ரக் ஷா பந்தன் இனிப்பு விற்பனை, கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி, இந்த ஆண்டு இது ரூ.5,000 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் நடக்கும் இனிப்பு விற்பனையில் ரக் ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தியில் மட்டும் 25% நடக்கிறது.

 சில மாநிலங்களில் ஊரடங்கு விதிகளில் ஏற்பட்ட குழப்பத்தால் பலர் இனிப்புகளை முன்கூட்டியே உற்பத்தி செய்யவில்லை.