ALL ஆன்மீகம் NEWS VIDEO
மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநர்
June 7, 2020 • Dharmalingam

 

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளால் உயிர்பிழைத்த 3 பேர்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில் புனேவில் மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அவரிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் தற்போது மூன்று பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை 46 வயதான ஒருவருக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதே போல் அவரது கணையம்- சிறுநீரகம் 52 வயதான ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு சிறுநீரகம் ரீனல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் தொற்று இல்லை என தெரிந்த பிறகே அறுவை சிகிச்சை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். நோயாளிகள் மூன்று பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக கூறியுள்ளனர்.