ALL VIDEO NEWS ஆன்மீகம்
மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை வெள்ளம்
August 4, 2020 • Dharmalingam

மும்பை வானிலை செய்தி: பரேல் பகுதியில் தண்ணீர் தேங்கிய தெருவழியாக பயணிகள் நடந்து சென்றனர்

திங்கட்கிழமை இரவு முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அதிக மழை பெய்யும் என கணித்ததால், இன்று மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது." என்று மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுதுறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் உள்ளூர் ரயில் சேவைகள் சில வழித்தடங்களில் நிறுத்தப்பட்டன. புறநகர் கண்டவாலியில் மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மேற்கு புறநகர் பகுதியில் இருந்து தெற்கு மும்பை நோக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கொங்கன் மற்றும் உள் மகாராஷ்டிரா விலும் பலத்த மழை பெய்யும்.

நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு, கன்டிவாலி மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 26 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கோரேகான், கிங் சர்க்கிள், ஹிந்த்மாதா, தாதர், சிவாஜி சௌக், ஷெல் காலனி, குர்லா எஸ்டி டிப்போ, பாந்த்ரா டாக்கீஸ், சியான் சாலை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.