ALL ஆன்மீகம் NEWS VIDEO
முதல்வர் பழனிசாமி திடுக் குற்றச்சாட்டு
December 20, 2019 • Dharmalingam • NEWS

 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர் என்று முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு இரண்டு அவைகளிலும் அதிமுக ஆதரவாக வாக்களித்தது. லோக்சபாவில் ஒரு அதிமுக எம்பியும், ராஜ்ய சபாவில் 11 அதிமுக எம்பிக்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்

இலங்கை தமிழர்கள் பலர், இலங்கை ராணுவத்தால் அப்போது கொல்லப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக கருணாநிதி அறிவித்ததை நம்பி ஈழத்தமிழர்கள் உயிர்நீத்தனர்.1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட கருணாநிதி காரணமாக இருந்தார். கருணாநிதி வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்தனர்

அதேபோல் நானும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியிடம் நான் பேசுவேன். தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகள் இலங்கை அகதிகளுக்கும் செய்துத் தரப்படுகிறது.