ALL ஆன்மீகம் NEWS VIDEO
முட்டைகோஸ் - மருத்துவ குணங்கள்
August 9, 2020 • Dharmalingam

இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம்.

காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
 
ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி  உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் “முட்டைகோஸ்”.
 
இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும். முட்டைகோஸ் பல வகைகளாக இருக்கின்றன.
 
முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக்  காணப்படும்.  இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.
 
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.
 
தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

  • முட்டைகோஸில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும். இதில் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தக் கூடிய குளுட்டமைல் உள்ளதால், வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால், குணம் பெறலாம்.
  • கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
  • சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
  • வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
  • எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
  • பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
  • தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
  • உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்

நமது உடலில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி  மிகவும் அவசியமான ஒன்று. முட்டைகோஸை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் அண்டாமல் நமது உடலை பாதுகாக்கலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் ஆரோக்கிய  பயணம் தொடரும்.

மற்றும் ஒரு உடல் ஆரோக்கிய  குறிப்புடன்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா