ALL VIDEO NEWS ஆன்மீகம்
முக்கிய வரலாறு நிகழ்வுகள் .
June 21, 2020 • Dharmalingam

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்

1948ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜாஜி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். 

_____________________________

ஜீன் பால் சார்த்

 பிரான்ஸ் நாட்டின் தத்துவமேதை ஜீன் பால் சார்லஸ் அய்மார்டு சார்த்  1905ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரீஸில் பிறந்தார்.

இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வானிலையாளராக பணிபுரிந்தபோது ஜெர்மன் படையினரிடம் பிடிபட்டு 9 மாதங்கள் போர் கைதியாக சிறையில் இருந்தார். அங்குதான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் பற்றி ஒரு நாடகம் எழுதினார்.

 பின்பு இருத்தலியல் (existentialism) என்பது ஒரு மனிதநேயம்  என்ற தனது தத்துவக் கோட்பாட்டை 1946ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

 இவரது அற்புத இலக்கியப் படைப்புகளுக்காக 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

சிறந்த தத்துவமேதை, நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வலர், இலக்கிய விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட ஜீன் பால் சார்த் தனது 74வது வயதில் (1980) மறைந்தார்.

*********************

2002ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.