ALL VIDEO ஆன்மீகம் NEWS
முக்கியச் செய்திகள்
June 4, 2020 • Dharmalingam

முக்கியச் செய்திகள்

ரயில் முன்பதிவு கட்டணங்கள்

ரயில் முன்பதிவு கட்டணங்களை திரும்ப பெற நாளை முதல் முன்பதிவு மையம் திறப்பு 

* சென்னையில் குறிப்பிட்ட முன்பதிவு மையங்கள் திறக்க முடிவு

* கொரோனா காரணமாக ஜூன் 30 வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது

ஊரடங்கு மீறல்

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.9.98 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

பொதுமுடக்க விதிகளை மீறிய 4,45,256 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை 5,40,334 வழக்குகள் பதிவாகின- - காவல்துறை

சென்னையில் கொரோனா

சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும்

* தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் 

* தனிமைப்படுத்துதல் ரத்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் விளக்கம்

கேரளா -மதுபானங்கள்

கேரளாவில் மே 28 முதல் ஒரு வாரத்தில்  ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

* BevQ செயலியில் நாள்தோறும் 4.50 லட்சம் பேர் பதிவு செய்து இ-டோக்கன் பெற்று மது வாங்கியுள்ளனர்

இந்தியாவிடம் மன்னிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான கலவரத்தின் போது வாஷிங்டனில் இருக்கும் மகாத்மா காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது அமெரிக்கா