ALL VIDEO NEWS ஆன்மீகம்
மீனவர்கள் போராட்டம்
July 31, 2020 • Dharmalingam

ரெட்டேரியில் மீன் பிடிக்கும் குத்தகையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் என, மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதில், மீனவர்களுக்கு ஆதரவாக பாஜவினர் பங்கேற்றனர்.

மீன் பிடிப்பதற்கான ஏலத்தை உள்ளூர் மீனவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், உள்ளூர் மீனவர்களுக்கே மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் மீனவர் அணி சார்பில் நேற்று காலை 11 மணி அளவில் ரெட்டேரியில் போராட்டம் நடத்தினர்.

மீனவர் அணி மேற்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் வினோத் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்கள் ஏரிக்கு மீன் பிடிக்க வந்தனர்.

மீனவர்கள் கூறுகையில், ‘ரெட்டேரி மீன் பிடி குத்தகையை ரத்து செய்துவிட்டு, மீனவர்கள், மீன் வியாபாரிகளுக்கும் குத்தகையை வழங்க வேண்டும்.

அப்படி, செய்தால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் வியாபாரம் நடைபெறும். இது குறித்து தமிழக அரசு மற்றும் பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.