ALL VIDEO NEWS ஆன்மீகம்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
June 6, 2020 • Dharmalingam

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் காற்றானது மணிக்கு 40, முதல் 50, கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அடுத்த 24, மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

வரும் 8.ம் தேதி  மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழையை மேலும் வலுவடையும்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48, மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

அடுத்த 24, மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி,  ஆகிய மாவட்டங்களில்இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

அதிகபட்ச வெப்பநிலை 39, டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29, டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.