ALL VIDEO ஆன்மீகம் NEWS
மீண்டும் ஒரு சிறுமி!- வன்கொடுமை
July 3, 2020 • Dharmalingam

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது.

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

 

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது.  பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று  ட்விட்டர்ல  தி மு க தலைவர் ஸ்டாலின் தம்முடைய  வருத்தத்தை  தெரிவித்துள்ளார் 

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். 

நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  

நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள்  -வரலட்சுமி சரத்குமார் கண்டனம்

 

தமிழகத்தில் உள்ள இளம் வழக்குரைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

 

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கோயில்களில் நேற்றுமுன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்

கோயிலுக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிடில், கோயிலுக்குள் அனுமதி கிடையாது.

நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் அனுமதியில்லை. அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விபூதி, குங்குமம் உட்பட பிரசாதம், பாக்கெட்டுகளாக வழங்க வேண்டும்.