ALL VIDEO NEWS ஆன்மீகம்
மாவட்டத்தில் கொரோனா உறுதி
August 6, 2020 • Dharmalingam

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,347 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,660 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்  மேலும் 2 மருத்துவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,306 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மேலும் 285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,824 ஆக உயர்ந்துள்ளது.