ALL ஆன்மீகம் NEWS VIDEO
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து - இரயில் போக்குவரத்து அனுமதி
September 2, 2020 • Dharmalingam

தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்தார்.

இதனால் 01.09.2020  ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. 

சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கியது. இந்நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது  அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரயில் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.