ALL ஆன்மீகம் NEWS VIDEO
மாலை நேரச் செய்திகள்
June 6, 2020 • Dharmalingam

 

மாலை நேரச் செய்திகள்

சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா

 

தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் ரூ.10.44 கோடி அபராதம் வசூல் 

4,50,479 வாகனங்கள் பறிமுதல் 

5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

5,48,842 வழக்குகள் பதிவு  -- தமிழக காவல்துறை

 

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல்

* பொதுவார்டில் நாள் ஒன்றுக்கு ரூ.5,000 ரூபாய் முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் என தகவல்

* தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயம்  என தகவல்..

 

2 நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் தங்கள் வீடுகளில் இருந்து காணொலி மூலம் அவசர வழக்குகளை விசாரிப்பர் என அறிவிப்பு.

கடந்த 1ம் தேதி முதல், உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தங்களது அறையில் இருந்து விசாரணை நடத்திய நிலையில் திடீர் மாற்றம்.