ALL NEWS ஆன்மீகம் VIDEO
மாருதி சுசுகி
June 16, 2020 • Dharmalingam

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட மாடலான ஆல்டோ கார் தொடர்ந்து 16வது ஆண்டாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற சாதனையை படைந்துள்ளது.

வளர்ந்து வரும் வாடிக்கையாளர் விருப்பங்களை உன்னிப்பாகக் கவனித்து அத்தகைய மாற்றங்களுடன் மாருதி சீரமைத்தது. சமீபத்தில் அரசு புகுத்திய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளின்படி தற்போதைய தலைமுறை ஆல்டோ மாற்றப்பட்டுள்ளது

இந்தியாவின் ஆரம்ப விலை கொண்ட ஹேட்ச்பேக் மாடல் கார்களில் முதல் முதலாக பிஎஸ்6 தரத்தில் வெளிவந்தது ஆல்டோ தான்.

2019 - 20ம் ஆண்டில் 1.48 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டில் விற்பனையில் 30 லட்சம் கார்கள் என்ற மைல்கல்லையும் ஆல்டோ கடந்திருந்தது.

2000-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான ஹேட்ச்பேக் ரகத்திலான ஆல்டோ கார் 2004ம் ஆண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடலாக உயர்ந்தது. அது முதல் இந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக அந்த சாதனையை இக்கார் தக்கவைத்துக்கொண்டுள்ளது.