ALL VIDEO NEWS ஆன்மீகம்
மாநிலச் செய்திகள்
August 7, 2020 • Dharmalingam

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் நாளை (ஆகஸ்ட் 8) மற்றும் வரும் 10, 13ஆம் தேதிகளிலும், மேலும் சுதந்திர தின விழா அன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்...:

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும், அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடைமுறை தேர்வும், நவம்பர் 9ஆம் தேதி முதல் செமஸ்டர்தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது