ALL NEWS ஆன்மீகம் VIDEO
மாநிலச் செய்திகள்
June 4, 2020 • Dharmalingam

மாநிலச் செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் :

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம் :

ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

நாளை முதல் ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து :

நாளை முதல் ரயில்வே டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலேயே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் :

முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்த கோரினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு :

இந்திய படைத் தளவாட கருவி உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 82,000 ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

நடிகர் ரஜினிகாந்த் கடிதம் :

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது என மத்திய அரசிற்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.