ALL ஆன்மீகம் NEWS VIDEO
மாநிலச் செய்திகள் பிளாஸ்மா தானம்
August 13, 2020 • Dharmalingam

.மாவட்டச் செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு:

சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றில்  இருந்து மீண்ட 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் வழங்கி உள்ளனர். ஒருவர் பிளாஸ்மா தானம் செய்வதால் இருவரை காப்பாற்ற முடியும். சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.

உச்சநீதிமன்றம் அனுமதி:

மார்ச் 31ஆம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் மட்டும் பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும் எனவும், மார்ச் 31ஆம் தேதிக்கு பின் வாங்கப்பட்ட பி.எஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:

ஆந்திர கடலோரத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் அடுத்த 8 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து ரூ.5,076-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

31வது கூட்டம் ஒத்திவைப்பு:

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 31வது கூட்டம் நாளை (ஆகஸ்ட் 14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டம் நடைபெற்றபோது சில மாநிலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது


விளையாட்டுச் செய்திகள் பேட்டிங் தேர்வு:

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பயிற்சி முகாமிலிருந்து விலகல்:

சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே பயிற்சி முகாமிலிருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.