ALL ஆன்மீகம் NEWS VIDEO
மாணவர்களின்எதிர்காலம் அரசு முடிவெடுக்க வேண்டும் - சோனியா
August 28, 2020 • Dharmalingam

 

நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது.

பின்னர் முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இதனிடையே ஜே.இ.இ மற்றும் நீட்  நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது வீடியோவில்,மாணவர்களாகிய நீங்கள்  மிகவும் கடினமான சூழலை  எதிர்கொள்கிறீர்கள்.

நாட்டின் எதிர்காலம் நீங்கள் தான்.மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்றால் அவர்களின் ஒப்புதலுடன் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.