ALL VIDEO NEWS ஆன்மீகம்
மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றுபவர்களை கண்டறிந்து அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை
August 3, 2020 • Dharmalingam

தமிழகம் முழுவதும் பொதுஇடங்களில் சுற்றித்திரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

அதில் கொரோனா காலத்தில் பேருந்து நிலையங்கள், தெருவோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுஇடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றித்திரிவதாகவும், இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதினால் அவர்களை தொற்றில் இருந்து விடுபட செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.