ALL ஆன்மீகம் NEWS VIDEO
மத்திய உள்துறை அமைச்சர் விரைவில் வீடு திரும்புவார் - மருத்துவமனை
August 30, 2020 • Dharmalingam

அமித்ஷா தனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், மருத்துவர்கள் ஆலோசனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.

கடத்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில, தற்போது கொரோனா குணமான நிலையிலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் அமித்ஷா, முற்றிலும் குணமடைந்துள்ளார் என்றும் கூடிய விரைவில் வீடு திரும்புவார் எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.