ALL NEWS ஆன்மீகம் VIDEO
மதுரை ஸ்டைலில் சூப்பரான சுவையில் ஆட்டு மூளை ரெசிபி
August 5, 2020 • Dharmalingam

மதுரை ஸ்டைலில் சூப்பரான சுவையில் ஆட்டு மூளை வறுவல் செய்ய

ரெசிபி இதோ

ஆட்டு மூளை ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. எனவே வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டு மூளை - 1
நல்லெண்ணெய் - 1 1/2 tbsp
சின்ன வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp மஞ்சள் - 1/2 tsp
மிளகு - 1 1/2 tsp
தண்ணீர் - 1/4 கிளாஏ
உப்பு - .சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

ஆட்டு மூளையை முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். 

கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பின் முழு ஆட்டு மூளையை அப்படியே போட்டு மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.

பிரட்ட பிரட்ட மூளை உடைந்து உதிர்ந்துவிடும். பின் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து பிரட்டிவிட்டு தட்டு போட்டு மூடி விடுங்கள்.

சிறு தீயில் 5-6  நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றும் அளவிற்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மூளை வறுவல் தயார்.

சூப்பரான  மதுரை ஸ்டைலில் சூப்பரான சுவையில் ஆட்டு மூளை வறுவல்  ரெடி

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்

வணக்கம் அன்புடன் கார்த்திகா