ALL VIDEO ஆன்மீகம் NEWS
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடக்கம் முதல்வர்
August 7, 2020 • Dharmalingam

 

மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

மேலும் மதுரையில் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றார்.

இதன் பின்னர் அவர் பேசுகையில், மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.

அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளா

வைகை ந‌தி மேம்பாட்டிற்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.167 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

சிறுகுறு தொழில் நிறுவன மேம்பாட்டிற்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு

ரூ.356 கோடியில் கே.புதூரில் தொழிற்பேட்டை - முதலமைச்சர் அறிவிப்பு

இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன  - முதல்வர் பழனிசாமி