ALL VIDEO ஆன்மீகம் NEWS
மணமகனுக்கு கொரோனா பாதிப்பு
June 23, 2020 • Dharmalingam

 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லியில் வசிக்கும் ஒருவருக்கு உத்தரப்பிரதேச மாநில பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது.

அதனால் திருமணத்திற்காக மணமகன் குடும்பத்தினர் கடந்த 15ம் தேதி உத்தரபிரதேசம் அமேதிக்கு வந்துள்ளனர். அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் திருமணத்திற்காக மணமகன் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

அப்போது மணமகன் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அதிகாரிகள் செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். 

மணமகன் மற்றும் அவரது தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமண நிகழ்வை நடத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.